Friday, July 5, 2013

People have lost faith in Judiciary : Judges lament at Mega Lok Dalat : Cuddapah : Indian Judicial system is to protect democracy and freedoms of people : If people loose faith in Judiciary, recovering that faith would be almost impossible நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்: சட்ட நிபுணர்கள் வேதனை



Brief NOTES in English followed by original News in Tamil
******************************************************************************


People have lost faith in the Judicial system / Judiciary : Judges lament at Mega Lok Dalat : Cuddapah : Andhra Pradesh


Judges speaking at the Mega Lok Adalat conducted at Cuddapah lamented that Indians are loosing faith in Indian Judiciary and Judicial system. They also felt that the respect for Judiciary is going down (/reducing) .


While speaking to media persons, Cuddapah Judge Honourable Justice C P Nagarjun Reddy said courts starting from the lower courts upto the Supreme court of India have lost their prestige and status before the people. He also said Judiciary in general is loosing its status before the people


High court Justice Honourable Shri Ramana also spoke during the function and mentioned that courts and governmental agencies have failed to deliver timely justice to people . He said Delayed justice was a cause for the loss of faith

Judges expressing their anguish openly has shocked members of the public  / civil society




*******************************************************************

NEWS IN TAMIL from DINAMALAR WEB SITE

*******************************************************************


நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்: சட்ட நிபுணர்கள் வேதனை



கடப்பா : இந்திய நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக சட்ட நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் நீதித்துறை மீதான மதிப்பும் சரிந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் சட்டத்துறை விழா ஒன்றில் கலந்து கொண்ட நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


**நீதிபதிகள் கருத்து** :


ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்ட நீதிபதி சி.பி.நாகர்ஜூன ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், கீழ் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரையிலான அனைத்து நீதித்துறை அமைப்புக்களும் தங்களின் மதிப்பை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீதித்துறை குறித்து கருத்து தெரிவித்த ஆந்திர ஐகோர்ட் நீதிபதி என்.வி.ரமணாவும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தேவைப்படும் துறைகள் மூலம் மக்களுக்கு நீதி வழங்க தவறி விட்டதாகவும், விரைந்து நீதி வழங்கவும் அரசுகள் தவறி விட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இதனால் மக்கள் மத்தியில் இந்திய நீதித்துறை மீதான மதிப்பு குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


**நீதித்துறை குறித்து வேதனை** :



நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் ஒருமுறை இழந்து விட்டால் அதன் பிறகு இந்திய நீதித்துறை திட்டமே சிதைவடைந்து போய்விடும் என நாகர்ஜூன ரெட்டி தெரிவித்துள்ளார். மக்கள் உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய திட்டம் நீதித்துறை திட்டம் எனவும், அதன் தனது போக்கில் தளர்வு காட்டுவதால் மிகவம் மோசமான மதிப்பை மக்களிடம் பெற்றுள்ளது எனவும், நீதித்துறை இவ்வாறு இருந்தால் மக்களையும், ஜனநாயகத்தையும் யார் காப்பாற்றுவது எனவும் நீதிபதி ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

ராயசோட்டி பகுதியில் கடப்பா மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த மெகா லோக் அதாலத் விழாவில் கலந்து கொண்ட மாவட்ட மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள், இந்திய நீதித்துறை குறித்த இந்த கருத்தை தெரிவித்துள்ளனர். நீதித்துறை குறித்து நீதிபதிகளே இவ்வாறு தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.



http://www.dinamalar.com/news_detail.asp?id=678568

No comments:

Post a Comment