Friday, July 19, 2013

SAD DAILY DOWRY ARREST SAGA ! Husband's sister arrested on wife's complaint !! Husband and parents run away to save themselves !!

The sad saga of a woman complaining about dowry, the police registering case on the entire family of six, husband's sister being arrested and the rest of the family running away / absconding to save themselves has happened in Tamil Nadu 

Sudha of Myladuthurai (south east Tamil Nadu) has complained to the AWPS that her in laws are demanding additional dowry and have driven her away from her house

There are also some allegations that he kid was taken away, but now the kid is with her

Police have booked a case on six of family including Sudha's husband Ilavarassan and arrested the husband's young sister

Husband who is employed at Madras and other relatives have absconded to save themselves

SURPRISING THERE IS NO TALK OF MEDIATION WHILE SPECIFIC ORDERS OF THE MADRAS HIGH COURT STATE CLEARLY THAT THERE SHALL BE MEDIATION IN SUCH CASES 

வரதட்சணை கேட்டு கொடுமை குழந்தையை பறித்து கொண்டு பெண் விரட்டியடிப்பு

மயிலாடுதுறை:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பொன்னவராயன் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (29). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன கண்ணார தெருவை சேர்ந்தவர் சுதா (27). இருவருக்கும் 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

திருமணத்தின் போது 100 பவுன் நகை, ரூ.5 லட்சம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.
இருவரும் சென்னையில் வசித்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதாவை பட்டுக்கோட்டைக்கு வரவழைத்த இளவரசனின் பெற்றோர், அங்கேயே தங்க வைத்தனர். இளவரசன் மட்டும் சென்னையில் இருந்து வந்தார். இந்நிலையில் இளவரசனுக்கு சம்பளம் கூடுதலாக தற்போது ரூ.85 ஆயிரம் வாங்குவதாகவும், கூடுதல் வரதட்சணையாக காரும், ரூ.2 லட்சம் பணமும் வாங்கி வர வேண்டும் என்றும் கூறி சுதாவை மாமியார் சந்திரகாந்தம், நாத்தனார் மாலதி மற்றும் உறவினர்கள் குபேந்திரன், ராஜ்குமார், முத்துலட்சுமி ஆகியோர் வற்புறுத்தி உள்ளனர்.

இதற்கு சுதா மறுத்ததால், குழந்தையை பிடுங்கி வைத்துக் கொண்டு சுதாவை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். அதன்பின் மயிலாடுதுறையில் உள்ள தாய் வீட்டுக்கு சுதா வந்துவிட்டார். மயிலாடுதுறை வந்த இளவரசனின் தாய், அக்கா மற்றும் உறவினர்கள், குழந்தையை சுதாவிடம் ஒப்படைத்துவிட்டு,  கூடுதல் வரதட்சணையை கொடுத்தால்தான் சேர்ந்து வாழ முடியும், மீறி வீட்டுக்கு வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.இதுபற்றி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசில் கடந்த 17ம் தேதி சுதா புகார் செய்தார். சுதாவின் கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார், நாத்தனார் மாலதியை கைது செய்தனர். தலைமறைவான சுதாவின் கணவர், மாமியார் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.


http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=46290

No comments:

Post a Comment